சிங்கப்பூரின் பளுதூக்கும் வீரரான டான் ஹோவ் லியாங் காலமானார்…!!!

சிங்கப்பூரின் பளுதூக்கும் வீரரான டான் ஹோவ் லியாங் காலமானார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பளுதூக்கும் வீரரான டான் ஹோவ் லியாங் நேற்று (டிசம்பர் 3)காலமானார்.

அவருக்கு வயது 91.

டான் ஹோவ் ஏழு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்த டான் 1933 இல் தெற்கு சீன நகரமான ஸ்வாடோவில் பிறந்தார்.

அவர் நான்கு வயதில் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து சைனாடவுனின் நெருக்கடியான பகுதியில் குடியேறினார்.

14 வயதில் தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

தனது தந்தையின் இறப்பு அவரை ஒரு வலிமையான மனிதராக மாற்றியது.

டான் பல்வேறு நிதி நெருக்கடிக்கு ஆளாகி கப்பல்துறை பணியாளர், கடை எழுத்தர் மற்றும் எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு வேலைகளில் பணியாற்றினார்.

1952 இல் எவர்கிரீன் பழுது தூக்கும் பார்ட்டியில் சேர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

அதன் பலனாக அவர் 1958 காமன்வெல்த் விளையாட்டுகளில் கிளீன் அண்ட் ஜெர்க்கில் உலக சாதனையை முறியடித்தார.

மேலும் 1959 இல் நடந்த ஆசிய மற்றும் SEAP விளையாட்டுகளில் தங்கம் வென்றார்.

சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் பதக்க வீரராக அறியப்படும் டான் 1960 இல் ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அவருக்குப் பிறகு, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வென்றது.

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் அணியான ஃபெங் தியான்வே,லி ஜியாவே மற்றும் வாங் யுகு ஆகியோரால் அந்த வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.