போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த சிங்கப்பூரர் வியட்நாமில் கைது!!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த சிங்கப்பூரர் வியட்நாமில் கைது!!

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதிகாரிகள் கடந்த 2021 -ஆம் ஆண்டில் பதிவான போதைப்பொருள் கடத்தல் குறித்த வழக்கை ஒன்றை விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் 43 வயதுடைய சிங்கப்பூரர் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது.

அந்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து கொண்டே 43 வயதுடைய சிங்கப்பூரர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு அதை விற்பனை செய்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் அவர் வர்த்தகர்களுக்கு கொடுத்த போதைப்பொருளை அவர்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்காகவும் பயன்படுத்தி வந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வழக்கு தொடர்பாக சந்தேக நபரை வியட்நாமில் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 472 கிராம் எடையுள்ள அபின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டில் வசித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரை கண்டுபிடிப்பதற்காக வெளிநாட்டு காவல்துறையின் உதவியை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கோரியது.

அவர் ஜூன் 28-ஆம் தேதி சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டவுடன் சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.