சிங்கப்பூரின் ரொட்டி பரோட்டா, உலகிலேயே சிறந்த ரொட்டி தரவரிசை பட்டியலில் 11வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய உணவான பரோட்டா, சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த இந்தியர்களால் அங்கே அறிமுகமானது.
தற்போது அது சிங்கப்பூரில், இந்திய உணவு வகைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது.
சிங்கப்பூர் உணவு வகைகளில் பரோட்டா பிரதானமாக விளங்குகிறது. பொதுவாக காலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.
பரோட்டா பொதுவாக இரண்டு வகைகள். பிளைன் பரோட்டா மற்றும் முட்டை பரோட்டா.
ஆனால் சிங்கப்பூரில் உள்ள நவீன உணவகங்கள், சீஸ், காளான், வாழைப்பழம், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற புதுமையான பரோட்டா வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த மாறுபாடுகளில் முருதப்பாவும் அடங்கும். சைவம் மற்றும் அசைவம், ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கின்றது.
மற்றுமொரு அற்புதமான மாறுபாடுதான் Tissue பரோட்டா. இது மிகவும் மெல்லிய மற்றும் மிருதுவான பரோட்டாவாகும். இதில் பால் மற்றும் சர்க்கரை தெளிக்கப்பட்டு மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.