தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 24 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த ஜேசன் தே தகுதி பெற்றார்.

நிமிபுடர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் அயர்லந்தின் நூட் நுயெனை தே தோற்கடித்தார்.

72 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் 19-21,21-18,21-9 செட் கணக்கில் தோற்கடித்தார்.

இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த வாங் ஸெங் ஸிங்குடனை எதிர்கொள்வார்.

இருவரும் இதற்குமுன் இரு ஆட்டங்களில் மோதியுள்ளனர்.அதில் ஒரு ஆட்டத்தில் தே ஸெங்கை தோற்கடித்தார்.

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியின் காலிறுதிச் சுற்று கடந்த மாதம் நடைபெற்றதில் உலகத் தரவரிசைப் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த kodai naraoka வீழ்த்தினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு 5 போட்டிகளில் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.