ஜூன் 20-ஆம் தேதி சிங்கப்பூரர் ஒருவர் கலிபோர்னியாவின் கப்பல் ஒன்றிலிருந்து கடலுக்குள் விழுந்தார்.
Muhammad Furqan Mohamed Rasid என்ற நபரைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டது.
அவருக்கு வயது 25. கப்பல் அதிகாரிக்கான தகுதி பயிற்சியில் பங்கேற்றார்.
அவரின் நண்பர் முகமது Fariz தனது Facebook, “பக்கத்தில் புர்கான் மிகவும் நம்பிக்கையும், உற்சாகத்துடன் இருப்பவர்´´ என்று பதிவிட்டுள்ளார்.
கடலில் காணாமல் போன தனது நண்பனை தேடும் பணி முழு வீச்சில் செயல்பட்டது. ஆனால், பெருங்கடலால் தேடும்பணி சற்று சிக்கலாக இருப்பதாவும் குறிப்பிட்டார்.
அதோடு,“ கடலில் காணாமல் போன தனது நண்பர் திரும்ப கிடைக்க வேண்டும்.அதற்காக உங்கள் ஆதரவும், பிராத்தனையும் தேவை´´ என்று வேண்டுகோள் விடுத்தார்.
“காணாமல் போனவரைத் தேடுவதை நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல.அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் நாங்கள் தேடும் முயற்சியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.புர்கானின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்´´ என்று தலைமை வாரண்ட் அதிகாரி கூறினார்.
தேடும் பணி 15 மணி நேரத்துக்கு பிறகு நேற்றிரவு (ஜூன் 21) நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.