சட்டவிரோதமான முறையில் 33 வெளிநாட்டினரை வேலைக்குச் சேர்த்த சிங்கப்பூரர்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 64 வயதுடைய சிங்கப்பூரர் ஆங் பெக் லியாங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக 33 வெளிநாட்டவர்களை பணியில் சேர்த்து விட்டதாக சந்தேகிக்கப்படுகிறார்.
இது தொடர்பாக மனிதவள அமைச்சகம் ஜூலை 4 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அவர் கடந்த 2018 முதல் 2021 வரை, Viber ஆப்பை பயன்படுத்தி 33 வெளிநாட்டினரை பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களாக வேலைக்கு சேர்த்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் 27 பேர் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள்.
ஐந்து பேர் வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் அனுமதியை வைத்திருந்தனர்
.
மீதமுள்ள ஒருவர் Dependant Pass அட்டையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களில் யாரும் துப்புரவுப் பணியாளராக பணிபுரிவதற்கான அனுமதி அட்டையை வைத்திருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.
Follow us on : click here