சிங்கப்பூரில் சுங்கவரி செலுத்தாத சுமார் 260 மது பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது.அதன் மதிப்பு 35000 வெள்ளிக்கும் அதிகம்.அக்டோபர் 8-ஆம் தேதி அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மலேசியர் மற்றும் இருவர் சீனர்கள்.அவர்கள் 42 வயது முதல் 63 வயதுடையவர்கள்.
ஜூரோங் வெஸ்ட்டில் ஒரு லாரியில் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் செலுத்தப்படாத வரி,ஜிஎஸ்டி வரி போல் 20 மடங்கு தொகை அதிகபட்ச அபராதமாக விதிக்கப்படலாம்.இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.