மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது...!!!
சிங்கப்பூர்: மலேசியாவில் 19 வருடங்களாக தலைமறைவாக இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, 51 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (S$72 மில்லியன்) அதிகமாக மோசடி செய்ததாக டிசம்பர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மோசடி செய்த குற்றத்திற்காக இருவரும் இன்று( டிசம்பர் 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.
கைதான 58 வயதான இங் டெக் லீ என்பவர்’சிட்டிராய இண்டஸ்ட்ரீஸ்’ என்ற மறுசுழற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இருந்தார்.
மறுசுழற்சி தவிர, மின் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்டெடுப்பதிலும் நிறுவனம் ஈடுபட்டது.
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ‘AMD’, ‘Intel’ மற்றும் ‘Infineon’ போன்றவை இருந்தன.
இருப்பினும், மின்-கழிவைத் துண்டாக்கி, அதிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, இங் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
2008 இல் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, அவர்கள் தங்கள் திட்டங்களின் மூலம் 51 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் S$72 மில்லியன் சம்பாதித்துள்ளதாக அறியப்படுகிறது.
இங் டெக் லீ மற்றும் அவரது மனைவி, 55 வயதான தோர் சுவீ ஹுவா ஆகியோர் இணைந்து கூட்டுச்சதி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் 2005 இல் ஊழல் புலனாய்வுப் பிரிவு (CPIB) இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியபோது இருவரும் நாட்டை விட்டு வெளியேறினர்.
கணவன், மனைவி இருவரும் 19 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் டிசம்பர் 3-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் படி,இருவரும் ஜோகூர் பாருவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினரிடம் பிடிபட்டனர்.
மலேசிய அதிகாரிகள் தம்பதிகளை சிங்கப்பூரின் சிபிஐபியிடம் அன்றே ஒப்படைத்தனர்.
இருவரும் அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேறு அடையாளங்களில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg