சிங்கப்பூர் : ரத்த தானம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்!!

சிங்கப்பூர் : ரத்த தானம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்!!

கடந்த மூன்று ஆண்டுகளில் ரத்ததானம் செய்யும் 16 முதல் 25 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது.

15 சதவிகித இளைஞர்கள் மட்டுமே கடந்த வருடம் ரத்த தானம் செய்துள்ளனர் என சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக குறைந்த அளவிலான இளைஞர்கள் ரத்த தானம் செய்துள்ளனர்.

மக்கள் தொகையில் வயது முதிர்ச்சிக்கேற்ப ரத்தத்தின் தேவை அதிகரித்து வரும்.ஆனால் ரத்த தானம் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறியது.

வயது முதிர்ச்சி அடையும் சமூகத்தின் நலன் கருதி இளைஞர்கள் அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்திகிறது.

அனைத்து வயதினர் மற்றும் இளைய தலைமுறையினரிடம் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.குறிப்பாக இளைஞர்களிடம் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது.

அதற்கான முயற்சிகளை சமூக ஊடகங்களின் வாயிலாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டு வருகிறது.