சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் நியூ ரூல்ஸ்!!

சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் நியூ ரூல்ஸ்!!

சிங்கப்பூருக்கு செல்ல S PASS,E PASS,NTS PERMIT,WORK PERMIT,TEP PASS,TWP PASS என பல பாஸ்கள் உள்ளன.ஆண்டுதோறும் இந்த பாஸ்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் வரும்.அதேபோல இவ்வாண்டும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

Work பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.என்னென்ன விதிமுறைகள் வந்துள்ளன என்பதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.

புதிய விதிமுறைகள் :

கால அவகாசம் நீட்டிப்பு :

இதற்குமுன் R2 ஸ்கில் முடித்தவர்கள் 16 வருடமும்,R1 ஸ்கில் முடித்தவர்கள் 26 வருடமும் சிங்கப்பூரில் இருக்கலாம் என்ற விதிமுறை இருந்தது.

ஆனால் இனி அப்படியில்லை.சிங்கப்பூரில் இனி எத்தனை வருடங்கள் வேண்டுமெனாலும் இருக்கலாம் .நீங்கள் சிங்கப்பூரில் இருக்க கால அவகாசம் இல்லை.

வயது வரம்பு :

Work பெர்மிட் வைத்திருக்கும் Non-Malaysian Workers (இதில் இந்தியாவும் அடங்கும்) சிங்கப்பூரில் 50 வயது வரை மட்டுமே இருக்க முடியும்.தற்போது வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.இனி அவர்கள் சிங்கப்பூரில் 61 வயது வரை இருக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் இளம் வயதினரையே எடுக்கின்றனர்.என்னதான் அனுபவம் இருந்தாலும் நிறுவனங்கள் ஊழியர்களின் வயதை பார்க்கின்றனர்.இந்த புதிய விதிமுறை ஊழியர்களுக்கு பயன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.