சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! வரும் வாரங்களில் எப்படி இருக்கும்?
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்னும் ஓரிரு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
மேலும் 2 வாரங்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், மிதமான காற்று தென்மேற்கு அல்லது தென்கிழக்கில் இருந்து வீசும் எனவும் மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் சில பகுதிகளில் காலை மற்றும் மதியம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் சுமத்ராவிலிருந்து வரும் பலத்த காற்றானது சிங்கப்பூரில் ஓரிரு நாட்களுக்கு காலை மற்றும் அதிகாலை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கொண்டு வர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் மழையின் அளவானது சராசரியாக பதிவாகலாம்.
தினசரி அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை எட்டும்.
மேலும் இரவு நேரங்களில்
வெப்பமாக உணரலாம்.
மேலும் சில இரவுகளில் வெயிலின் தாக்கமானது 28 டிகிரி செல்சியசை தொடலாம்.
Follow us on : click here