சிங்கப்பூரில் இந்த மாதத்திற்கான வானிலை நிலவரம்!!
சிங்கப்பூரில் இந்த மாதம் பிற்பகுதியில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களில் பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த ஆண்டு(2025) மார்ச் மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக பலத்த காற்று வீசும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நாட்களில் வெப்பநிலை 23 டிகிரிக்கு குறையக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 1-ஆம் தேதி அன்று பயா லேபார் பகுதியில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL