சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!
சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தின்(இம்மாதம்) முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகல் மற்றும் சில நாட்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.
வட ஆசியாவில் காற்றழுத்தம் அதிகரித்துள்ளதால் தென் சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். சிங்கப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
இந்த மாதம் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை :
பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.
ஒரு சில நாட்களில் வெப்பநிலை 22 செல்சியஸ் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here