சிங்கப்பூர் – உக்ரைன்!! இருநாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்!!

சிங்கப்பூர் - உக்ரைன்!! இருநாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர்- உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் தங்களின் விமான போக்குவரத்து தொடர்புகளை விரிவு படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இஸ்தானாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி,சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்துடன் சந்திப்பு நிகழ்ந்தது.

பின்பு இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான நல்ல நட்புறவை இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும் அவர்கள் உள்ளூர் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினார்கள்.

சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

ஸெலென்ஸ்கி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்து பேசினார்.

சிங்கப்பூர் -உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் தங்களின் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் போன்றவைகளில் மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினர்.

அனைத்து நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் எல்லைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் ஒப்புக்கொண்டனர்.

பிறகு பிரதமர் வோங் மற்றும் ஸெலென்ஸ்கி ஆகியோர் உக்ரைன் – சிங்கப்பூர் விமான சேவை ஒப்பந்தம் கையெழுத்தாவதை பார்வையிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாட்டு விமான நிறுவனங்களும் சில விதிமுறைகளுடன் எந்த தடையும் இல்லாமல் இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.