சிங்கப்பூர் : சாலையின் நடுவே சைக்கிள்களை வைத்த சம்பவம்!! இரு இளைஞர்கள் கைது!!

சிங்கப்பூர் : சாலையின் நடுவே சைக்கிள்களை வைத்த சம்பவம்!! இரு இளைஞர்கள் கைது!!

சிங்கப்பூர் : டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் காமன்வெல்த் அவென்யூவில் மூன்று சைக்கிள்கள் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்தன.

சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த புகைப்படத்தை ஜெரல்டின் என்ற வாகன ஓட்டுநர் ROADS.sg பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஜெரல்டின் அந்த சைக்கிள்கள் சாலையின் மூன்று தடத்தையும் முழுவதுமாக மறைக்கும் வகையிலும் வாகனமோட்டிகளுக்கு இடையூறாகவும் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறினார்.

அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சைக்கிள்களை அவரே சாலையில் இருந்து அகற்றியதாகவும்,மற்றொரு சைக்கிளை எடுப்பதற்குள் ஒரு டாக்ஸி அதனை இடித்து விட்டு சென்றதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

சாலையின் நடுவே சைக்கிள்களை நிறுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 15 மற்றும் 16 வயதுடைய இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.