சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!!
சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் உள்ள Banana Leaf Apolo மற்றும் Shahi Briyani House Ptd Ltd உணவகங்கள் அதன் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு வாரங்களுக்கு மூட சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த தகவலை சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு உணவகங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு உணவகங்களும் நவம்பர் 8-ஆம் தேதி(நேற்று) முதல் வரும் 21-ஆம் தேதி வரை மூடப்படும்.
Banana Leaf Apolo உணவகம் 56 ரேஸ் கோர்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. அதற்கு 15 Demerit points கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்திற்கு 1000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Shahi Briyani House Ptd Ltd உணவகம் 10 ரோவெல் ரோட்டில் அமைந்துள்ளது.இந்த உணவகத்திற்கு மொத்தம் 16 Demerit points வழங்கப்பட்டதோடு 1100 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உணவுகளை கையாளும் அனைவரும் மறுபயிற்சியில் தேர்ச்சி பெற்ற பின்னரே வேலைக்கு திரும்ப முடியும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவகங்கள் தூய்மையை கட்டிக்காக்கும்படி நினைவூட்டியது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0