சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!!

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!!

சிங்கப்பூரில் உள்ள பிடோக் பகுதியில் இரு கார்கள் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 49 வயதுடைய கார் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் விபத்து குறித்த படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறை ஜனவரி 10ஆம் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு தகவல் பெற்றதாக தெரிவித்தன.

இரு பாதைகளை பிரிக்கும் சாலையின் நடுவில் ஒரு வெள்ளை நிறக் கார் மோதியது.

ஒரு கருப்பு நிறக் கார் பாதுகாப்பு தடுப்புச் சுவரில் மோதியது.

அதன்பிறகு மற்ற கார்கள் சாலையைக் கடக்க முடியவில்லை.

70 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.