சிங்கப்பூர் : இரண்டு பேருந்துகள் மோதி விபத்து!! மருத்துவமனையில் 9 பேர் அனுமதி!!
அப்பர் தாம்சன் ரோட்டில் இன்று இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து டிசம்பர் 8-ஆம் தேதி (இன்று) மதியம் சுமார் 12.40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சமூக வலைத்தளங்களில் இந்த விபத்து குறித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
SBS Transit பேருந்தும்,Tower Transit பேருந்தும் மோதிக் கொண்டது விபத்து ஏற்பட்டது.
இரண்டு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் 9 பேர் டான் டொக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டிருந்தது .ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here