சிங்கப்பூர் : தீப்பிடித்து எரிந்த லாரி!! புகை மூட்டமாக மாறிய சாலை!!
சிங்கப்பூரில் தீவு விரைவுச் சாலையில் (PIE) லாரி ஒன்று தீப்பற்றி எரிந்த புகைப்படம் ஆன்லைனில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சாலையில் புகை மண்டலமாக தெரிவதைக் காணலாம்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இச்சம்பவம் குறித்து டிசம்பர் 10 ஆம் தேதி (நேற்று) காலை சுமார் 8.50 மணியளவில் தகவல் வந்ததாக 8 World செய்தித்தளத்திடம் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு குடிமைத் தற்காப்புப் படை விரைவதற்கு முன்னதாகவே தீ அணைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று 8 world செய்தித்தளம் தெரிவித்தது.
மேலும் லாரி எதனால் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Follow us on : click here