சிங்கப்பூர் : பாஸ்போர்ட் இன்றி பயணமா!! புதிய வசதி அறிமுகம்!!

சிங்கப்பூர் : பாஸ்போர்ட் இன்றி பயணமா!! புதிய வசதி அறிமுகம்!!

சிங்கப்பூர் : வரும் திங்கட்கிழமை முதல் சிங்கப்பூரின் நிலக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளைக் பாஸ்போர்ட் இல்லாமல் கடக்கலாம்.

My ICA செயலியில் முன்னதாகவே பயணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.அதில் வரும் QR குறியீட்டைக் காண்பித்து உட்லண்ட்ஸ் ,துவாஸ் சோதனைச் சாவடிகளை கடந்து செல்லலாம்.

நிலச் சோதனைச் சாவடிகளில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி இருந்து அதற்கான முன்னோட்டச் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 48000 க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பங்கேற்றனர்.

அங்குள்ள தானியக்கச் சோதனை முகப்புகள் அனைத்திலும் அந்த வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த வசதி மரினா பே சொகுசு கப்பல் நிலையத்திலும் திங்கட்கிழமை அறிமுகமாகும்.

இந்த புதிய வசதி அறிமுகம் கண்டாலும் சிங்கப்பூரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை தங்களிடம் எப்போதும் வைத்திருக்க வேண்டும் .

தேவைப்பட்டால் மேலும் சரிபார்ப்புக்கு பாஸ்போர்ட்டை காண்பிக்குமாறு அதிகாரிகள் கேட்கலாம்.

சிங்கப்பூரில் மட்டுமே குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளைக் பாஸ்போர்ட் இல்லாமல் கடக்கலாம் . ஆனால் நீங்கள் செல்லும் நாட்டில் அல்லது நகரில் பாஸ்போர்ட்டை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.