சிங்கப்பூர் : கான்கிரீட் தளத்தில் முதல்முறை கூடு கட்டிய உலகின் மிக வேகமான பறவை!!

சிங்கப்பூர் : கான்கிரீட் தளத்தில் முதல்முறை கூடு கட்டிய உலகின் மிக வேகமான பறவை!!

சிங்கப்பூர் : மத்திய வர்த்தக பகுதியில் முதல்முறை Peregrine Falcons இன பறவைகள் கூடுகட்டியுள்ளது.

அவை Chulia Street OCBC Centre இன் 34 வது தளத்திற்கு மேல் உள்ள வெற்று இடத்தில் கூடிகட்டியுள்ளன.

அங்கேயே முட்டையிட்டுள்ளது.ஆனால் அவைகளை அடைகாக்காமல் அவை பறந்து விட்டது.

தேசிய பூங்கா கழகத்தின் முதன்மை வனவிலங்கு ஆய்வாளர் டாக்டர் மெல்கம் சோ கூறுகையில்,அடைகாக்க தகுந்த சூழல் இல்லாததால் பறவைகள் முட்டைகளை விட்டுவிட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறினார்.

இந்த வகை பறவைகள் சரளை மண்ணுள்ள இடங்களில் கூடு கட்டுவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக இங்குள்ள கட்டிடங்களின் காங்கிரீட் தளத்தை தேடியிருக்கலாம் என்று கூறினார்.

அவை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் தன்மை கொண்டது. இது உலகின் மிக வேகமாக பறக்க கூடிய உயிரினமாக பறக்கக் கூடியது.

அவை அடுத்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் மீண்டும் கூடு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக தங்களது குழு அங்கு கூடு கட்டும் அமைப்பை அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.