சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!!

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!!

சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு.

2019 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடையே இளைஞர்கள் புரிந்த குற்றச் செயல்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டது.அதனை சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது.

சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடையே 1000 இளைஞர்களில் சராசரி 5 இளைஞர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர்களில் சுமார் 90 சதவீதத்தினர் மறுவாழ்வு திட்டங்களை முடித்துள்ளனர்.

தற்போது 16 வயதுக்கு கீழுள்ள இளைஞர்களின் வழக்குகள் மட்டுமே இளைஞர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

16 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களின் வழக்குகள் இளைஞர் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள சிறார்,இளம் வயதினர்களுக்குடைய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. இது அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

அவர்களை மறுவாழ்வு திட்டங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் மீண்டும் குற்றங்களை தவிர்க்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

“இளைஞர்களின் குடும்பங்கள்,சமூகப் பங்காளிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் இளைஞர்கள் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுப்பதற்கு முக்கியப் பங்காற்றுகின்றனர்.அவர்களது அர்பணிப்புக்கு கடமைப்பட்டிருக்கிறோம் ” , என்று சமுதாய ,குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் Eric Chua கூறினார்.