சிங்கப்பூர் : பல வாகனங்கள் மோதிக் கொண்டு பயங்கர விபத்து!! பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

சிங்கப்பூர் : பல வாகனங்கள் மோதிக் கொண்டு பயங்கர விபத்து!! பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதி கொண்டு விபத்துக்குள்ளானது.

நவம்பர் 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் வந்ததாக ‘செய்தி’யிடம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.

இந்த விபத்து உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கி செல்லும் வழியில் நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் வீடியோ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Khoo Teck Puat மருத்துவமனைக்கு 9 பேரும்,உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்துக்கு 8 பேரும் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் ஒரு பேருந்து,லாரிகள்,கார்கள் மோதிக்கொண்டன.