அழிந்து வரும் விலங்கினங்களை, தாவரங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் தேசிய பூங்கா கழகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிங்கப்பூரில் மட்டும் காணப்படும் சதுப்பு-வன நண்டுகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் அதில் ஒன்று.
இப்போது முதன்முறையாக இயற்கைப் பகுதிக்கு சதுப்பு-வன நண்டுகள் திரும்புகின்றன.
இயற்கை பகுதிக்கு சுமார் 20 நண்டுகளை திருப்பி அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவைகளை மீண்டும் இயற்கைப் பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன் அந்த சூழல் அவைகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி நடத்தியது.
அங்குள்ள சூழல்களுக்கு ஏற்றது போல் வாழ்கின்றனவா? வளர்கின்றனவா? என்பதை ஆராய்ச்சியாளர்களால் நுண்ணிப்பாக கண்காணிக்கப்படும்.
தற்போது சுமார் 120 க்கும் அதிகமான விலங்கினங்கள், தாவரங்கள் அந்த பாதுகாப்புத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.