சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!!
சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும் பணியைத் துரிதப்படுத்துவதற்கான கருத்தை சிங்கப்பூர் போக்குவரத்து சங்கத் தலைவர் லிம் கியன் சீன் முன் வைத்திருந்தார்.
அதிகபட்சமாக 3500 கிலோகிராம் மற்றும் 12000 கிலோகிராம் வரை எடை கொண்ட லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
ஊழியர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதில் அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கலாம்.
இத்தகைய வாகனங்கள் மணிக்கு 60 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லாமல் இருப்பதை அது செய்யும்.
2023 ஆம் ஆண்டிற்கான நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வருடாந்திர வாகன புள்ளி விவரங்களின் படி,அதிகபட்ச எடை 3500 கிலோகிராம் மற்றும் 12000 கிலோகிராம் வரை எடைக் கொண்ட லாரிகள் கிட்டத்தட்ட 17,000 லாரிகளில் இது ஒரு சதவீதத்திற்கும் குறைவானது.
2024ஆம் ஆண்டு ஜனவரியில் தகுதியான லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகளை தொடங்கிய போக்குவரத்து காவல்துறை மிகவும் குறைவான விகிதத்தில் இருப்பது குறித்து திரு. சண்முகம் எழுத்துப்பூர்வ பதிலில் கவலை தெரிவித்தார்.நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விகளுக்கு திரு. சண்முகம் பதிலளித்துள்ளார்.
இந்த தகுதிவிதியை 50 லாரிகள் மட்டுமே நிறைவேற்றியிருப்பது ஏமாற்றமளிப்பதாக திரு. இங் கூறினார்.
“(2026 ஆம் ஆண்டு முதல்) இது கட்டாயமாக மாறுவதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது, ” என்று நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இங் கூறினார்.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிர் ஆபத்தில் உள்ளன என்று அவர் கூறினார்.
அதிக லாரி ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த ஊக்குவிப்பதற்கு,அங்கீகரிக்கப்பட்ட வாகன விநியோகிப்பாளர்கள், சிங்கப்பூர் வாகன வர்த்தகர்கள் சங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனை நிலையங்களுடன் போக்குவரத்து காவல்துறை சேர்ந்து செயல்பட்டு வருவதாக திரு சண்முகம் கூறினார்.
Follow us on : click here