சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!!
வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது முதல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்கைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல பங்காளித்துவ நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிபெண்கள் பங்கெடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் Allswell Trading நிறுவனம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து பானங்களை வழங்கும்.
இந்த ஒப்பந்தம் இரண்டு ஆண்டு நீடிக்கும்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர்கள் பிரிவு மற்றும் Allswell Trading வர்த்தக நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அந்த பிரிவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் மற்றும் பணிப்பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
Follow us on : click here