சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Shopee இணைய வர்த்தகத்தளத்தில் பொருள்களை விற்கும் உள்ளூர் வர்த்தகர்கள் விரைவில் கூடுதல் கட்டணமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யலாம்.
இவ்வாண்டு (2025) அறிமுகமாகும் புதிய திட்டத்தின்கீழ் அது சாத்தியமாகும்.
SIP எனும் Shopee அனைத்துலகத் தளத்தை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் Shopee நிறுவனம் இணைந்து உருவாக்கியது.
இது கடந்த ஆண்டு ஒரு சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் 8,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மலேசியா,தாய்லாந்து,பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் பொருட்களை வர்த்தகர்கள் விற்கலாம்.மேலும் அவர்களுக்கு தளவாடம்,சேகரிப்பு கிடங்கு மற்றும் விளம்பரம் ஆகியவற்றிலும் Shopee நிறுவனம் ஆதரவளிக்கும்.
அண்டை நாடுகளுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கான செலவு சிறிய நிறுவனங்களுக்கு கட்டுப்படியாக இருப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய திட்டம் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த புதிய திட்டத்தால் நிறுவனத்தின் மொத்தப் பொருள் மதிப்பு 8 மடங்காக உயர்ந்துள்ளது.
முடிந்தவரை இந்த திட்டத்திற்கு அதிகமான விற்பனையாளர்களை ஈர்க்க Shopee நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
FOLLOW US ON MORE ⏬:
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==