சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் மூத்த குடிமக்களுக்காக Health up! என்ற புதிய திட்டம் அறிமுக செய்யப்படவிருக்கிறது.இந்த திட்டத்தில் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அவர்களுக்குரிய மருத்துவப் பரிசோதனைகள், உடலுறதி நடவடிக்கைகள் மற்றும் பல தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களுக்கு இதில் பதிந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் தற்போது தெம்பனிஸ் பகுதியில் நடப்பில் இருக்கிறது.இதனை துணை பிரதமர் Heng Swee keat அறிவித்தார்.Heartbeat@Bedok யின் 5-ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
மற்ற உதவிகளையும் ஈஸ்ட் கோஸ்ட் வட்டார வாசிகள் எதிர்பார்க்கலாம்.மேலும் அதிகமான மூத்தோர் சுகாதாரத்திலும், உடல் நலத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய முதுமை காலத்தில் நல்ல முறையில் காலத்தைச் செலவிட வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார்.
நாட்டில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருள் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டது.
பராமரிப்பு வழங்குவதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும். மேலும் பலவற்றை சாதிக்க அனைவரும் இணைந்து செயல்பட்டால் சாதிக்கலாம் என்று ஹெங் கூறினார்.