உலகின் செலவாக்கு மிக்க பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை சிங்கப்பூர் தக்க வைத்துள்ளது.
மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து மேலும் பெருமையைச் சேர்த்துள்ளது.இந்த ஆண்டின் புதிய தரவரிசைப் பட்டியலை Henley பாஸ்போர்ட் குறியீடு வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு இந்த பெருமை புதிது இல்லை. இதற்கு முன் பலமுறை இப்பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதி உள்ளதால் மேலும் வலுப்பெற்றுள்ளது.
பிரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான்,ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா,பின்லந்து,அயர்லந்து,லக்ஸம்பர்க்,நெதர்லந்து,தென்கொரியா, சுவிடன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.