மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்...!!!

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள்.

எனவே அவர்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், மியான்மர் மற்றும் தாய் செஞ்சிலுவைச் சங்கங்களுடன் இணைந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.

பொதுமக்களும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்று சங்கம் நம்புகிறது.

நிலநடுக்கத்தில் சிக்கியுள்ள குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு “Restoring Family Links”  என்ற சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவிக்கு rfl@redcross.sg என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.