Latest Tamil News Online

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்!

மூன்றாவது நாள் முழுவதும் உங்களுக்கு கிளாஸஸ்(Classes) நடக்கும். உங்களுக்கு அவர்கள் கொடுத்த Tab இல் சிங்கப்பூர் ரூல்ஸ்,எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும். அதனைப் பார்த்து கொள்ளுங்கள்.ஏனென்றால், உங்களுக்கு தெரியாததை கூட தெரிந்து கொள்ளலாம். புதிதாக சிங்கப்பூர் வருபவர்கள் நன்கு கவனித்துக் கொள்வது நல்லது.

மூன்றாவது நாளிலேயே யார் யார் வெளி ஆக வேண்டும் என்பதைக் கூறிவிடுவார்கள்.

நீங்கள் கடைசி தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்குள் இருந்தால், மூன்றாவது நாள் வெளியாகலாம். மூன்றாவது நாள் Quarantine இல் இருந்து செல்பவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கிடையாது.

அதே நீங்கள் கடைசி தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்கு மேல் ஆகி இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி போட்டு தான் ஆக வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லாதவர்களை அவர்களின் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு கீழே செல்ல சொல்வார்கள்.

கிளாஸ் ரூம் வெளியே லக்கேஜ்களை வைத்துக் கொள்ளலாம். Quarantine முடித்தவர்களுக்கு Certificate வழங்குவார்கள். உங்களிடம் நீங்கள் மூன்றாவது நாள் செல்லலாம் என்று கூறியதும், கம்பெனியிடம் தெரிவித்து விடுங்கள். Onboard centre லிருந்து நீங்கள் வேலை செய்ய போகிற கம்பெனிக்கு Mail அனுப்பப்படும். அதனை மறந்து விடாமல் டிரைவர் வரும்போது பிரிண்டவுட் (Printout) எடுத்து வர சொல்லுங்கள். டிரைவர் அதனை காண்பித்தால் மட்டுமே உங்களை வெளியே செல்ல அனுமதிப்பார்கள். கம்பெனியிலிருந்து உங்களை அழைத்து செல்ல வருபவரை மாலை 5.30 மணிக்குள் வர சொல்லி விடுங்கள்.