Work Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கு மட்டும் சிங்கப்பூரில் Quarantine உள்ளது.நீங்கள் Quarantine இல் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தங்குவீர்கள்.Quarantine – இல் இருக்க போவபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இது அமையும்.On board centre க்கு நீங்கள் சென்றவுடன் என்ன செய்ய வேண்டும்? அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
சிங்கப்பூர் வருவதற்கு நிறைய பாஸ்கள் இருக்கிறது. அதில் Work Permit ஒன்று.தற்போது Work Permit எளிதாக கிடைக்கும் பாஸ். நீங்கள் டெஸ்ட் அடிச்சு Work permit மூலமாகவோ, Pcm permit மூலமாகவோ அல்லது Shipyard permit மூலமாகவோ புதிதாக வந்தீர்கள் என்றால் Quarantine உண்டு.
இந்த பெர்மிட்கள் மூலம் சிங்கப்பூரில் இருந்தவர்கள் லீவுக்காக ஊருக்கு போயிட்டு வருபவர்களுக்கு Quarantine கிடையாது.
இதற்கு முன் பதிவிட்ட சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!முதல் நாள்! கட்டுரையில் Onboard centre இல் முதல் நாள் என்ன நடக்கும்? நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றிய தகவல்கள் இருக்கும். அதனைப் படிக்காதவர்கள் படித்து கொண்டு வாருங்கள்.
அதன் லிங் 📌👇
https://www.sgtamilan.com/four-days-of-singapore-quarantine-the-first-day/: சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!இரண்டாம் நாள்!Quarantine-இன் இரண்டாவது,நாள் காலை 8 மணிக்கு உங்களை கீழே வர சொல்வார்கள். சிறுநீரக பரிசோதனைக்காக அந்த டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் ரூமில் இருப்பவர்களிடம் ஒற்றுமையாக இருங்கள். ஒவ்வொரு ரூமில் உள்ளவர்களும் அவரவர் ரூமுக்கு முன் வரிசையாக நில்லுங்கள் என்று அதிகாரி கூறுவார்.
இரண்டாவது நாள் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய டாக்குமெண்ட் Passport, Vaccination certificate, Ip, Urine sample. இவற்றை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவர்கள் கொடுத்த பேக்கில் மாஸ்க் இருக்கும். மறக்காமல் அதனை அணிந்து கொள்ளவும்.
மெடிக்கல் டெஸ்ட் எடுப்பதற்கு வரிசையாக நிற்க சொல்வார்கள். முதலில், சிறுநீரக பரிசோதனை எடுக்கப்படும். அதனை பரிசோதனை செய்வதற்கான பொருளை உங்களிடம் கொடுப்பார்கள். அதில் வரக்கூடிய கலரைப் பார்த்து உங்களிடம் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளப்படும்.
உங்களிடம் மெடிக்கல் டெஸ்ட் சீட் கொடுக்கப்படும். அல்ர்ஜி, ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பதில் அளிக்க வேண்டும்.
அதன் பிறகு, BP செக்கப் செய்யப்படும். அங்கே மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் நிற்க வேண்டும்.டாக்டர் கூப்பிடும்போது மட்டும் அவர்கள் அருகில் செல்ல வேண்டும். அவர்கள் சற்று வேகமாக செயல்படுவார்கள்.
அதன்பின் கண் பரிசோதனை செய்யப்படும். கண் பரிசோதனைக்கு அவர்கள் காண்பிப்பதை சற்று வேகமாக மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு ஈடாக நீங்கள் பதில் கூற வேண்டும். நீங்கள் சரியாக கூறவில்லை என்றால் உங்களுக்கு கண்ணில் பிரச்சனை இருக்கிறது என்று முடிவு செய்துவிடக்கூடும். அவர்களிடம் இருந்து ஏதேனும் தவறு நடந்தால் அதனை இரண்டு, மூன்று முறை மறுபடியும் சரிப்பார்த்து கொள்வார்கள்.
அதன் பின் டிரைவர்களுக்கு மட்டும் Color blind டெஸ்ட் எடுக்கப்படும்.color blind என்பது ஒரு சில குறிப்பிட்ட கலரைப் பார்க்க இயலாது.உங்களுக்கு Color blind குறைபாடு பாதிப்பு இருந்தால், நீங்கள் டிரைவர் வேலைக்கு தகுதி இல்லை என்று ரிசல்ட் கொடுக்கப்படும்.Color blind குறைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில கலர்களைப் பார்க்க முடியாது. அதனால் விபத்துகள் கூட நேரிடலாம்.
உங்களுடைய எடை, உயரம் செக் செய்யப்படும்.
பிறகு, X-ray எடுக்கப்படும். உங்களுடைய Shirt, chain ஆகியவற்றை கழட்டி வைத்துக் கொள்ளுங்கள். X-ray எடுத்த பின் டாக்டர் உங்களின் மெடிக்கல் டெஸ்ட் அனைத்தையும் சரிபார்ப்பார். அடுத்ததாக Vaccination certificate சரிபார்க்கப்படும.
மெடிக்கல் டெஸ்ட் முடிந்த பின்,உங்களுடைய ரூமுக்கு செல்லவும் என்று அதிகாரி கூறுவார். உங்களுக்கென Tab கொடுக்கப்படும். அதற்கான Username வழங்கப்படும். அங்கே Wifi வேகமாக இருக்காது. அதனால்,Onboard centre க்கு செல்வதற்குமுன் சிம் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
இரண்டாவது நாள் மாலை அவர்கள் சிம் கொடுக்கப்பார்கள். அதிகாரி உங்களுடைய பெயரை கூப்பிடும் பொழுது, அவர்கள் கேட்கும் டாக்குமெண்ட்களை எடுத்து கொள்ளுங்கள்.
அந்த Tab இல் சிங்கப்பூர் ரூல்ஸ் பற்றியும்,எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும். அதனைப் பார்த்து கொள்ளுங்கள்.ஏனென்றால், உங்களுக்கு தெரியாததை கூட அதில் தெரிந்து கொள்ளலாம்.
மூன்றாம் நாள் Quarantine பற்றிய தகவலை அடுத்து வர உள்ள பகுதியில் காண்போம்……