சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!

PSA ( Port of Singapore Authority) என்பது மிகவும் அருமையான வேலை. ஏனென்றால்,சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு நிறைய பணம் செலவாகும். PSA வேலைக்கு நீங்கள் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் அல்லது Heavy licence அதாவது இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் நீங்கள் PSA வேலைக்கு நேரடியாக செல்ல முடியும்.

PSA வில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. அதில் டிரைவர், PSA லேசிங் உள்ளிட்ட மிக முக்கியமான வேலைகளும் உள்ளன.

PSA இல் வேலை எப்படி இருக்கும்?

சிங்கப்பூர் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் நிறைய கண்டெய்னர் ஏற்றி வரும்போது கடலில் விழாமல் இருக்க கம்பி வைத்து கட்டுவது.

இதில் நல்ல சம்பளம் கிடைக்கும்.செலவுகள் போக குறைந்தது இந்திய ரூபாய் மதிப்பில் 40,000 முதல் 50,000 வரை வீட்டிற்கு அனுப்பலாம்.

PSA வேலைக்கு இந்த இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே அதிகமாக ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த வேலைக்கு வருடத்திற்கு ஒரு முறை இந்தியாவில் வந்து நேரடியாக ஆட்களை தேர்வு செய்கின்றனர். இந்த வேலைக்கு முன்பணம் பெற்று அதற்கு ட்ரைனிங் கொடுக்கப்படும்.

பலர் இந்த வேலைக்கு எதிர்பார்த்து இருப்பதால் வேலை வாய்ப்பு தகவல் வந்தவுடன் பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.அவர்களுக்கு ட்ரைனிங் கொடுக்கப்பட்டு ஓர் உதாரணமாக 150 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தவர்களில் 100 பேரை தேர்வு செய்வர். அவர்களில் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்வர்.

நீங்கள் சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று விரும்புபவராக இருந்தால் PSA வேலையை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்த ஒன்று.ஆனால் இந்த வேலை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டிற்கான PSA வேலை வாய்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version