சிங்கப்பூர் : புதிய உச்சத்தை எட்டிய தனியார் வீட்டு விற்பனை!!
சிங்கப்பூர் : கடந்த மாதம் தனியார் வீட்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அதுவே அதிக எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர 2600வீடுகள் விற்பனையாகியுள்ளன.
அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் சுமார் 700 வீடுகள் விற்பனையானது.சொத்து நிறுவனங்கள் 2,800 க்கும் அதிகமான புதிய வீடுகளை கடந்த மாதம் விற்பனைக்கு விட்டது.
அவற்றில் Emerald of Katong திட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் விற்கப்பட்டுள்ளன.
இந்த மாதம் புதிய வீட்டுத்திட்டம் எதுவும் அறிவிக்கப்படாது.
இதன் காரணமாக விற்பனை குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் 2025 ஆம் ஆண்டு மேலும் புதிய வீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Follow us on : click here