மலேசியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் அதிகாரத்துவ பயணம்!!

மலேசியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் அதிகாரத்துவ பயணம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரும் மலேசியாவும் ஆகிய இருநாட்டு உறவுகளையும் மேலும் மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் அதிவேக ரயில் கட்டமைப்பு மற்றும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற திட்டங்கள் சீராக முன்னேறி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட
அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளன.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு Seri Perdana வில் மதிய விருந்தளித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் 11வது மலேசியா-சிங்கப்பூர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள இரு தலைவர்களும் ஆவலுடன் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திரு. வோங், மலேசிய துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃபையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​நிலையான வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மக்களிடையே பரிமாற்றம் போன்றவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.