சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!!
![](https://www.sgtamilan.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-29-at-11.19.50-AM-1-1024x538.jpeg)
சிங்கப்பூர் தனது 60ஆவது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாடவிருக்கிறது.
லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் சீனப் புத்தாண்டு உரையாற்றினார்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மை அனைவருக்கும் பலத்தை தருகிறது என்றும் நாட்டு மக்களின் புத்துணர்ச்சிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து தேட வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறியுள்ளார்.
பிற இனம் மற்றும் மதம் உடைய மக்களுடன் பேசி பழக மக்கள் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்களை வேறுபாடுகளால் பிரிக்கக்கூடாது என்றும் பிளவுப்பட்ட உலகில் சிங்கப்பூரர்களின் ஒற்றுமை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பங்களுக்கு ஆதரிப்பதில் தனது அரசாங்கம் உறுதி கொண்டுள்ளதாக திரு.வோங் கூறினார்.
சிங்கப்பூரில் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ச்சி செய்து வருவதாக பிரதமர் கூறினார்.
நாட்டின் முன்னோடிகளின் பங்களிப்புகளைப் பற்றி சிந்திக்க சீனப் புத்தாண்டு ஒரு நல்ல நேரம் என்று அவர் கூறினார்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0