சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் 6 நாள் பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கும்,கென்யாவுக்கும் சென்றுள்ளார்.
சிங்கப்பூருக்கும்,தென்னாப்பிரிக்காவும் இடையே பொருளியல் உறவையும் , நட்புறவையும் வளர்த்துக் கொள்வது முக்கியம் என்றார்.
வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் கலந்து கொண்ட உபசரிப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
சிங்கப்பூரர்கள் பிரகாசமான வாய்ப்புகள் உள்ள இடங்களில் தொழில் செய்வதைக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் புதிய பாதையில் வெளிச்சம் பாய்ச்சி அங்கேயே தங்கி புதிய அம்சங்களைத் தொடங்குவதாக கூறினார்.
சுமார் 60 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே,பொட்ஸ்வானா,ருவாண்டா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்.