சிங்கப்பூர் பிரதமர் லீயின் இந்தோனேஷியாவின் அதிபருடன் இறுதி சந்திப்பு!! எங்கே? எப்போது?

சிங்கப்பூர் பிரதமர் லீயின் இந்தோனேஷியாவின் அதிபருடன் இறுதி சந்திப்பு!! எங்கே? எப்போது?

ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோ டோ ஆகிய இரு தலைவர்களும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போகூர் செல்ல உள்ளனர்.

சந்திப்பு நிகழ்ச்சியின் இருவரும் “Significant Progress” குறித்து ஆய்வு செய்வார்கள். இது அவர்களின் பதவி காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து பேசுவார்கள். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் வான்வெளி மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒப்படைப்பு உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் பேசப்படும்.

விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் மூன்று ஒப்பந்தங்கள் முதன்முதலில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிந்தனில் நடைபெற்ற தலைவர்களின் பின்வாங்கலில் கையெழுத்திடப்பட்டது.

மேலும் இருதரப்பு ஒத்துழைப்புகளில் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு நிதி ஆகிய பல்வேறு துறைகளில் மேம்பட செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

covid19 நோய்த்தொற்று காலத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து சுகாதார பாதுகாப்பில் ஒற்றுமையுடன் செயல்பட்டதாகவும் மேலும் அதன் உறவை வலுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடக்கவிருக்கும் சந்திப்பானது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இந்தோனேஷியா பிரதமரான விடோடா ஆகிய இருவருக்குமான ஏழாவது இறுதி சந்திப்பு ஆகும்.

மேலும் இவர்களின் சந்திப்பில் டிஜிட்டல், பொருளாதாரம்,நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு முதலிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சந்திப்பு சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.