Chris Hipkins நியூசிலாந்து புதிய பிரதமராகப் பொறுப்பெற்றுள்ளார்.சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கிருமி பரவல் காலத்தில் இரு நாடுகளும் வலுவாக ஒத்துழைத்ததைக் கூறினார். விநியோகத் தொடர்புகளை இரு நாடுகளும் நீடிப்பதை உறுதி செய்ததாக அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நல் உறவு நீடித்து வருவதாகவும், நீண்ட கால நட்பைப் பகிர்ந்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளும் பொருளியல்களில் உள்ள பல்வேறு விவகாரங்களில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைத்துலகச் சட்டம் தடையற்ற வர்த்தகம் அதில் அடங்கும்.
இரு நாடுகளும் பங்காளித்துவத்தின் கீழ் சில அம்சங்களுக்கு ஒத்துழைக்கப்படுகின்றன. அதில் வர்த்தகம், தற்காப்பு, அறிவியல் தொழில்நுட்பம், மக்கள் பரிமாற்றம், பருவநிலை மாற்றம் முதலில் அம்சங்கள் ஆகும்.
இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்தார்.