சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கோவிட் 19 தொற்று!!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கோவிட் 19 தொற்று!!

பிரதமர் லாரன்ஸ் தனக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலைச் சீராக உள்ளதாகவும்,தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.மேலும் வீட்டில் இருந்தவாறே வேலை செய்வதாக தெரிவித்தார்.

உடல்நிலை சரியில்லாதபோது முகக்கவசம் அணியுமாறு அவர் நினைவுப்படுத்தினார்.

சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பிற தடுப்பூசிகளைப் அனைவரும் போட்டுக்கொள்ளும்படி திரு.வோங் கூறினார்.

ஒவ்வொருவரும் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளோரையும் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.