டாக்டர் லீ வெய் லிங்கின் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கலைத் தெரிவித்தார்!!

டாக்டர் லீ வெய் லிங்கின் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கலைத் தெரிவித்தார்!!

சிங்கப்பூரின் முதல் பிரதமரின் மகளான டாக்டர் லீ வெய் லிங் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ நன்னெறிக் கோட்பாடுகளில் இடைவிடாது கவனம் செலுத்தியதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் லீயை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது ஆனால் அவர் தனது வாழ்க்கையை மருத்துவத்திற்கு அர்ப்பணித்தவர் என்பது தெரியும் என்றார்.

டாக்டர் லீ டான் டொக் செங் மருத்துவமனையில் நரம்பியல் பிரிவின் தலைவர் என்று திரு. வோங் குறிப்பிட்டார்.

தேசிய நரம்பியல் கழகத்தை லீ நிறுவினார்.அவர் கழகத்தின் இயக்குநராக 11 ஆண்டுகளாக சேவையாற்றினார் என்பதை பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

ஆசியான் மாநாட்டிற்காக பிரதமர் லாரன்ஸ் வோங் லாவோஸ் சென்றுள்ளார்.

டாக்டர் லீயின் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டார்.