சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!!

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!!

சிங்கப்பூரில் சைபர் தாக்குதலால் ஏற்படக்கூடிய மின்தடைகளுக்கு நிறுவனங்கள் தயாராக இருப்பதற்கான பயிற்சியை நிறுவன களுக்கு அளிக்கப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள Exercise SG Ready பாவனை பயிற்சிகளில் 20 க்கும் அதிகமான கட்டிடங்கள் கலந்து கொள்கின்றன.

முழுமைத் தற்காப்பு தினமான பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கட்டிடங்களின் வெளியில் இருக்கும் விளக்குகள் அணைக்கப்படும்.

நகர மண்டபம், ஹியூம் MRT நிலையங்கள் செயல்படாத நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பயிற்சி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்களில் இது போன்ற நடமாடும் மின்சார உற்பத்தியில் இயந்திரங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.

இவை 400 வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளுக்கு 8 மணி நேரத்திற்கு மின்சாரம் வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் முழுமைத் தற்காப்பு பயிற்சியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Exercise SG Ready பயிற்சியின் போது இந்த வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.