ஓர் உயிரைக் காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள்!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் அவசர உயிர் காப்புச் சிகிச்சை அளித்து ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 8 ஆம் தேதி உட்லண்ட்ஸ் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, இருவர் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களில் ஒருவரின் தந்தை திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
குறைந்துகொண்டிருந்த அவரது உயிர்நாடி ஒரு கட்டத்தில் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
அதிகாரி இந்திரா உடனடியாக அவருக்கு சிபிஆர் எனப்படும் உயிர் காப்புச் சிகிச்சையை அளித்தார்.
ஆம்புலன்ஸ் வரும் வரை அதிகாரிகள் அகில் மற்றும் அலிஷா அந்த நபருக்கு தானியங்கி கையடக்க கருவியின் மூலம் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்தார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
ஒரு உயிரை காப்பாற்ற முடிந்ததற்காக அதிகாரி இந்திரா மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட அதிகாரி இந்திராவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg