15 மணி நேரத்திற்குள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேக நபரை கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை!!
சிங்கப்பூரில் ஹவ்காங் ஆவென்யூ 1 பகுதியில் உணவகங்களுக்குள் நுழைந்து திருடியதாக 37 வயது ஆடவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து 14-ஆம் தேதி அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உணவக நிலையத்தில் உள்ள புதிய உணவுக் கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த திருட்டு சம்பவத்தில் $328 வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அதன் அறிக்கையில் தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும்,அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் உதவியோடும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தை அடையாளம் கண்டனர்.
புகார் பெற்ற 15 மணி நேரத்திற்குள் சந்தேக நபரைக் காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து $175 வெள்ளி தொகை கைப்பற்றப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி(நேற்று) அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
Follow us on : click here