புகார் கிடைத்த 7 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை!! பிடிபட்ட ஜோடிகள்!!

புகார் கிடைத்த 7 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை!! பிடிபட்ட ஜோடிகள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் நேற்று (நவம்பர் 8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 வயதுடைய ஆணும் 24 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு நேற்று (நவம்பர் 8) மாலை 5.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்களை பயன்படுத்தி புதிய கைபேசிகளை வாங்கி அதை வேறு விற்பனையாளர்களுக்கு விற்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடனும், காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர்.

புகார் பெறப்பட்டு 7 மணி நேரத்திற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg