ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தேசிய சாதனையைப் பதித்துள்ள சிங்கப்பூர் வீராங்கனை!!
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை Gan Ching Hwee இரண்டாவது தேசிய சாதனையை படைத்துள்ளார்.
கான் தனது சொந்த சாதனையை விட சுமார் 2 விநாடிகளில் ஆட்டத்தை முடித்துள்ளார்.
ஆட்டத்தை முடிக்க அவர் எடுத்து கொண்ட நேரம் 8:32.37 நிமிடங்கள்.
இதற்குமுன் கான் தேசிய சாதனையை 1500 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது .
ஆவர் போட்டியில் Quah Ting Wen – க்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாவது தேசிய சாதனையைப் படைத்து சிங்கப்பூருக்கு பெருமையை சேர்த்துள்ளார்.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg