சிங்கப்பூர் : ரொட்டியில் பால் சேர்த்திருப்பதை குறிப்பிடாததால் திரும்ப பெற உத்தரவு!!
சிங்கப்பூரில் உள்ள மக்கள் சிலருக்கு பால் உட்கொள்வதால் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
தயாரிக்கப்படும் பொருட்களில் சேர்க்கப்பட்டிருக்கும் உணவு பொருட்களின் அளவை உணவு பொட்டலங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் ‘Bestore RTE Mini Bread” எனும் ரொட்டியில் பால் சேர்த்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த ரொட்டியை வாங்கிருந்தால் சாப்பிட வேண்டாம் என்று அமைப்பு கூறியது.மேலும் அந்த ரொட்டியைச் சாப்பிட்டிருந்தால் மருத்துவரைக் காணுமாறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
அந்த வகை ரொட்டிகள் சீனாவில் தயாரிக்கப்படுகிறது.கிரீன் ஆலிவ் குழுமம் சிங்கப்பூருக்குள் இந்த ரொட்டி வகையை இறக்குமதி செய்கிறது.
330 கிராம் கொண்ட ரொட்டிகளைப் பொட்டலங்களைத் திரும்ப பெற்றுமாறு அந்த குழுவிற்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரின் விதிமுறைப்படி,ஒரு உணவில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் ஏதேனும் சேர்த்திருந்தால் அது உணவு பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
Follow us on : click here