சிங்கப்பூர் ஒலிம்பிக் வீரருக்கு 4 ஆண்டுகள் தேசிய சேவையை ஒத்தி வைக்க அனுமதி!!

சிங்கப்பூர் ஒலிம்பிக் வீரருக்கு 4 ஆண்டுகள் தேசிய சேவையை ஒத்தி வைக்க அனுமதி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஒலிம்பிக் வீரர் மெக்சிமிலியன் மேடெருக்கு முழு நேர தேசிய சேவையானது நான்கு ஆண்டுகள் வரை ஒத்திவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம்(NS)சனிக்கிழமை (ஜூலை6)தெரிவித்துள்ளது.

அதன்படி அவர் 2028 வரை தேசிய சேவையை ஒத்தி வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Kitefoiling நீர் சாகச விளையாட்டு வீரரான அவருக்கு வரும் செப்டம்பரில் 18 வயதாவதை தொடர்ந்து அவர் செப்டம்பரில் தேசிய சேவையில் சேர வேண்டியது என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தேசிய சேவையை ஒத்திவைப்பதற்கான Maximilian விண்ணப்பத்தை கலாசார,சமூக இளையர்த்துறைஅமைச்சகம் ஆதரித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் மெக்சிமிலியனின் கனவுக்கு வழி செய்யும் வகையில் இந்த சலுகை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மெக்சிமிலியன் இப்போது உலகக் கோப்பை, ஆசிய கோப்பை மற்றும் ஐரோப்பிய கோப்பையை வென்றுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,”இது எனது விளையாட்டு முயற்சிகளில் எனக்கு ஆதரவளிப்பதில் நீண்ட தூரம் செல்கிறது, நான் தொடர்ந்து பயிற்சி பெறவும், முழுநேரப் போட்டியில் பங்கேற்கவும், சிங்கப்பூருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும் என்றும் எனக்கு உறுதியளிக்கிறது” என்று மேடர் ஜூலை 6 அன்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறினார். மேலும் சிங்கப்பூரில் தேசிய சேவையை நீண்டகாலமாக ஒத்திவைத்த மூன்றாவது தடகள வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.