“சிங்கப்பூர் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நாடு”

“சிங்கப்பூர் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நாடு”

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நிலைத்தன்மையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

பிராந்திய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபகாலமாக அதிகரித்து வரும் வர்த்தக தடைகள் மற்றும் இறக்குமதி தொடர்பான இடையூறு போன்ற சவால்களுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

இத்தகைய சவால்கள் உள்ளூர் வணிகங்களை பாதித்துள்ளதாக திரு தியோ கூறினார்.

சிங்கப்பூர் வணிகம் செய்வதற்கு நம்பகமான மற்றும் திறமையான இடமாக இருக்கிறது என்று திரு தியோ கூறினார்.

சிங்கப்பூர் உலகின் அனைத்துத் தரப்புடனும் நல்லுறவைக் கொண்டுள்ளதாகவும், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் திறமையானவர்களை ஈர்க்கும் திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதாகவும், உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டின் தற்போதைய நிலைமையை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

தொற்றுநோய் முடிந்துவிட்டாலும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போர்களின் வடிவத்தில் மற்ற இடையூறுகள் தொடர்வதாக கூறினார்.

காலநிலை மாற்றம் இயற்கை பேரழிவுகளின் தீவிரத்தை அதிகரிப்பதால் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக கூறினார்.

எனவே, நாடுகளுக்குள்ளும், நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயும் கொந்தளிப்பு மற்றும் நிச்சயமற்ற இந்த நேரத்தில்,சிங்கப்பூர் அமைதி, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சோலையாக திகழ்வதாக கூறினார்.