சிங்கப்பூர் : அடுத்த மாதம் 950000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு......
சிங்கப்பூரில் பொருள், சேவை வரியைச் சமாளிக்கவும்,குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
வரும் ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு 950,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு U-Save தள்ளுபடிகள், சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் கிடைக்கும்.
ஆண்டுதோறும் ஏப்ரல் ஜூலை அக்டோபர், ஜனவரி ஆகிய மாதங்களில் அந்த தள்ளுபடிகளை வழங்கப்படும்.
ஒரு மாதம் வரையிலான சேவை மற்றும் பராமரிப்பு கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள்.
$285 வெள்ளி வரை U-Save தள்ளுபடிகளை தகுதியுடைய குடும்பங்கள் பெறலாம்.
Follow us on : click here